Archives: மே 2025

odb

தொடர்புடைய தலைப்புகள்

> odb

உண்மையுள்ள உக்கிராணக்காரன்

2023ல் பெங்களூருவில் சில காலம் கழிக்கும் திட்டத்துடன் வந்தேன். ஆனால் அந்த காலம் நான் எதிர்பாராமல் நீண்டது. எனக்கு இரவு உணவு கொண்டு வரும் குடும்பத்தினர் எனக்கு உதவ முடியாத நிலையில், நான் வெளியே சாப்பிட ஆரம்பித்தேன். இது என் உடல்நிலையைப் பாதித்தது. அதிர்ஷ்டவசமாக நான் குறுகிய காலமே பழகிய ஒரு குடும்பம், எனக்கு உணவளித்து உதவ விரும்புவதாகச் சொன்னார்கள். அவர்கள் "பிறருக்கு உதவி சேவை செய்திடத் தேவன் எங்களுக்கு பெலனளித்துள்ளார், நாங்கள் உண்மையுள்ள உக்கிராணக்காரர்களாய் இருக்க வேண்டும்" என்றனர். தேவனின் வார்த்தை பல்வேறு சூழல்களில் உக்கிராணத்துவத்தை பற்றிப் பேசுகிறது மற்றும் நாம் "உண்மையுள்ள உக்கிராணக்காரர்களாக" (லூக்கா 12:42-48) இருக்க வேண்டும் என்கிறது. தேவன் நமக்குப் பல வரங்களைத் தந்திருக்கிறார், அவற்றை நாம் உண்மையாகப் பயன்படுத்த வேண்டும் என்று அவர் விரும்புகிறார் (1 பேதுரு 4:10). இந்த ஈவுகளைப் பயன்படுத்தி ஆர்வத்துடன் பிறருக்கு ஊழியம் செய்யவும், அன்புடன் விருந்தோம்பல் செய்யவும் நாம் வலியுறுத்தப்படுகிறோம் (வ.8-10). நம்மிடம் இருப்பது நமக்காக மட்டுமல்ல, பிறரின் நலனுக்காகவும் இருக்கிறது என்பதை ஒரு உண்மையுள்ள உக்கிராணக்காரன் உணர்ந்துகொள்கிறான். பெங்களூருவில் உள்ள குடும்பம் அதையே எனக்காகச் செய்தது. அவர்கள் தங்கள் பலத்தை உணர்ந்து அதற்கேற்ப உண்மையுள்ள உக்கிராணக்காரர்களாகச் செயல்பட்டார்கள்.

நம்மிடம் எத்தகைய திறன் இருந்தாலும் அது தேவனிடமிருந்தே வந்தது என்பதை நினைவில் கொள்வோம் (வ.10). நாம் பிறருக்கு உண்மையுள்ள உக்கிராணக்காரர்களாக இருக்க வேண்டும் என்பதற்காகவே வரங்களையும் உடைமைகளையும் அவர் நம்மிடம் நம்பி ஒப்படைத்துள்ளார். எனவே, நாம் எவ்வாறு செய்ய வேண்டும் என்று தேவன் விரும்புகிறார் என்பதை அறிந்து ஒருவருக்கொருவர் மனமுவந்து உதவி செய்வோம். நமக்குக் கொடுக்கப்பட்ட வரங்களும், தனித்தன்மை வாய்ந்த மனிதர்களாக நாம் உருவாக்கப்பட்ட விதமும் நமக்கு மட்டுமல்ல, தேவைப்படுகிற அனைவருக்கும் நன்மை பயக்கும் என்பதை நினைவில் கொள்வோம். தேவன் கொடுத்த கிருபைகள் மற்றும் ஈவுகளுக்கு ஏற்ப நாம் பிறருக்கு நன்மை செய்யும்போது, நாம் அவர்களின் உண்மையுள்ள உக்கிராணக்காரர்களாக மாறுகிறோம். 

 

தேவன் நம் தேவைகளை அறிகிறார்

ரமேஷ் என்ற ஆட்டோரிக்ஷா டிரைவர் சாலையோர கடையில் காபி குடித்துள்ளார். கோவிட் -19 லாக்டவுனுக்குப் பிறகு தினசரி பயணிகள் மீண்டும் திரும்பினர். இன்றைய விளையாட்டு நிகழ்வு அதிக பயணிகளைக் குறிக்கிறது என்று அவர் நினைத்தார். இழந்த வருமானத்தை திரும்ப பெறுவேன். இறுதியாக, நான் கவலைப்படுவதை நிறுத்த முடியும்.
அவர் வாகனம் ஓட்டத் தொடங்கவிருந்தபோது, அருகிலுள்ள பெஞ்சில் சுமனைக் கண்டார். தெருவைப் பெருக்குபவர் பேச வேண்டும் என்பது போல் கலக்கத்துடன் காணப்பட்டார். ஆனால் ஒவ்வொரு நிமிடமும் முக்கியம் என்று ரமேஷ் நினைத்தான். அதிக பயணிகள், அதிக வருமானம். என்னால தாங்க முடியல. ஆனால் சுமனை அணுக வேண்டும் என்று கடவுள் விரும்புகிறார் என்பதை அவர் உணர்ந்தார், எனவே அவர் செய்தார்.

கவலைப்படாமல் இருப்பது எவ்வளவு கடினம் என்பதை இயேசு புரிந்துகொண்டார் (மத்தேயு 6:25-27). எனவே நம்முடைய பரலோகத் தகப்பன் நமக்குத் தேவையானதைத் துல்லியமாக அறிந்திருக்கிறார் என்று அவர் நமக்கு உறுதியளிக்கிறார் (வச. 32). நாம் கவலைப்படாமல், அவரை நம்பி, அவர் விரும்புவதைச் செய்வதில் நம்மை அர்ப்பணிக்கவேண்டும் என்று நினைவூட்டப்படுகிறோம் (வச. 31-33). நாம் அவருடைய நோக்கங்களைத் தழுவி, கீழ்ப்படிந்தால், “இன்றைக்கு இருந்து நாளைக்கு அடுப்பிலே போடப்படும் காட்டுப் புல்லுக்குத் தேவன் இவ்விதமாக உடுத்துவித்தால், உங்களுக்கு உடுத்துவிப்பது அதிக நிச்சயமல்லவா?” என்று அவரில் நம்பிக்கைக் கொள்ளலாம் (வச. 30). ரோனியுடன் லாண்டோ உரையாடியதால், அவர் இயேசுவை ஏற்றுக்கொள்ளும்படிக்கு ஜெபித்தார். “அன்றும் தேவன் தனக்கு தேவையான பயணிகளைக் கொடுத்து உதவினார்” என்று லாண்டோ குறிப்பிட்டார். மேலும் “நான் அவருடைய தேவைகளை பார்த்துக்கொள்ளும்போது அவர் என் தேவைகளை சந்திக்கிறார்” என்று தேவன் தனக்கு நினைப்பூட்டியதாக அறிவிக்கிறார். 

 

ஒழுங்கின் தேவன்

 

சுரேஷ் மருந்து பெட்டியில் கிடைத்த அனைத்து மருந்துகளையும் எடுத்துக்கொண்டான். ஒழுங்கின்மை நிறைந்த ஓர் குடும்பத்தில் வளர்ந்த அவனது வாழ்க்கை சற்று குழப்பமானதாகவே இருந்தது. அவனுடைய தந்தை மரிக்கும்வரை தனது தாயாரை தொடர்ந்து துன்புறுத்திக்கொண்டே இருந்துள்ளார். தற்போது சுரேஷ் தன் உயிரை மாய்த்துக்கொள்ள விரும்பினான். ஆனால் தான் மரித்தால் எங்கே போவேன்? என்ற கேள்வி அவனுக்குள் உதித்தது. கர்த்தருடைய கிருபையால் சுரேஷ் அந்த தற்கொலை முயற்சியை அன்று கைவிட்டான். காலப்போக்கில், தன் நண்பர் ஒருவரின் வேதாகமத்தை வாசித்து, இயேசுவை சொந்த இரட்சகராக ஏற்றுக்கொண்டான். படைப்பில் இருந்த அழகும் ஒழுங்குமே, சுரேஷை இரட்சிப்புக்கு நேராய் ஈர்த்தது எனலாம். “நான் பார்க்கும் இந்த அழகான படைப்புகளுக்கு யாரோ ஒருவர் காரணமாய் இருக்கவேண்டும்” என்று அவன் கூறுகிறான்.

ஆதியாகமம் 1இல், அனைத்தையும் உண்டாக்கிய தேவனைக் குறித்து வாசிக்கிறோம். அப்போது “பூமியானது ஒழுங்கின்மையும் வெறுமையுமாய் இருந்தது” (வச. 2). அந்த ஒழுங்கீனத்தை அவர் மாற்றுகிறார். “வெளிச்சத்தையும் இருளையும் தேவன் வெவ்வேறாகப் பிரித்தார்” (வச. 4). கடல்களுக்கு மத்தியில் வெட்டாந்தரையை ஏற்படுத்தினார் (வச. 10). வகைவகையான தாவரங்களை உண்டுபண்ணுகிறார் (வச. 11-12, 21, 24-25). “வானங்களைச் சிருஷ்டித்துப் பூமியையும்... குடியிருப்புக்காகச் செய்து” படைத்தவர் (ஏசாயா 45:18), தொடர்ந்து தேசத்தை காத்து அதில் சமாதானத்தை உண்டுபண்ணி, சுரேஷ் ஒப்புக்கொடுத்ததுபோல நமது ஜீவியத்தையும் கிறிஸ்துவுக்கு ஒப்புவிக்கச்செய்வார்.

வாழ்க்கை குழப்பமாகவும் சவாலாகவும் இருக்கலாம். அவர் ஒழுங்கீனத்தின் தேவனல்ல; சமாதானத்தின் தேவன் (1 கொரிந்தியர் 14:33). நாம் இன்று அவரை நோக்கிக் கூப்பிட்டு, அவருடைய படைப்பின் அழகையும் ஒழுங்கையும் அறிந்துகொள்ள முற்படுவோம்.